ஆகஸ்ட் மாதம் முதல் மஹிந்திரா கார்களில் விலை அதிகரிப்பு

மஹிந்திரா நிறுவனம் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் தனது கார்களின் விலை 2 சதவீதம் அதிகரிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் தெளிவான விலை விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உற்பத்தி பொருள்களின் விலை அதிகரிப்பால் இந்த விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே டாடா, ஹூண்டாய் மற்றும் ஹோண்டா போன்ற நிறுவனங்களும் ஒரு சில மாடல்களின் விலையை அதிகரித்துள்ளது. அதே போல்,  மஹிந்திரா நிறுவனமும் ஒரு சில மாடல்களின் விலையை மட்டும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மஹிந்திரா நிறுவனம் இன்று  U321 என்ற குறியீட்டு பெயரால் அழைக்கப்படும் ஒரு புத்தம் புதிய MPV காரின் பெயர் மற்றும் சில விவரங்களை வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.  இது தொடர்பான விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மௌவலுடன் தொடர்பில் இருங்கள். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.