4 மீட்டாக்குக்கும் குறைவான நீளம் கொண்ட பொலிரோ மாடலை வெளியிடும் மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனம் விரைவில் 4 மீட்டாக்குக்கும் குறைவான நீளம் கொண்ட மேம்படுத்தப்பட்ட பொலிரோ மாடலை வெளியிட உள்ளது. உட்புறம் மற்றும் வெளிப்புற தோற்றத்தில் பெரிய மாற்றங்கள் இருக்காது அதன் நீளம் மட்டும் குறைக்கப்பட்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்  வீல்  பேசில் மாற்றம்  இருக்காது. இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனையான மாடல்களில் ஒன்றான பொலிரோ மாடல் மூலம் மஹிந்திரா நிறுவனம் மீண்டும் முதலிடத்தை பிடிக்க திட்டமிட்டுள்ளது தெரிகிறது.

இந்த மாடல் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. எனினும் இந்த மாடல் TUV300 மற்றும் நுவோஸ்போர்ட் மாடல்களில்  உள்ள 1.5 லிட்டர் mHawk  என்ஜினில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் TUV300 மற்றும் நுவோஸ்போர்ட் மாடல்கள் போலவே 7 பேர் அமரும் இருக்கை அமைப்பு கொண்டதாக இருக்கும்.

மஹிந்திரா நிறுவனம் KUV100, TUV300 மற்றும் நுவோஸ்போர்ட் மாடல்களை தொடர்ந்து நான்காவது மாடலாக சிறிய பொலிரோ மாடலை காம்பேக்ட்  SUV  செக்மென்ட்டில் வெளியிட உள்ளது.  

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.