நாளை வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட மஹிந்திரா KUV100

மஹிந்திரா நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு மேம்படுத்தப்பட்ட KUV100 மாடலை நாளை வெளியிட உள்ளது. இந்த மாடலில் சில ஒப்பனை மாற்றங்களும் சில கூடுதல் உபகரணங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட மாடல் மூலம் மீண்டும்  KUV100 மாடலின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாடலில் சில ஒப்பனை மாற்றங்களும், புதிய 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் மற்றும் புதிய AMT டிரான்ஸ்மிஷன் ஆகியவையும் கிடைக்கும். எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை அதே 1.2 லிட்டர் mFALCON எனும் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சினில் தான் கிடைக்கும். இதன்  டீசல் என்ஜின் மாடல் 82bhp (5500 rpm) திறனும்  115Nm (3500-3600rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் டீசல் என்ஜின் மாடல் 25.32 Kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இதன்  பெட்ரோல் என்ஜின் மாடல் 77bhp (3750 rpm) திறனும்  190Nm (1750-2250rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் பெட்ரோல் என்ஜின் மாடல் 18.15 Kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. மேலும் இந்த மேம்படுத்தப்பட்ட மாடலின் விலையில் மாற்றம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.