ரூ.4.53 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது மகிந்திரா - KUV100

மகிந்திரா நிறுவனம் ரூ.4.53 லட்சம் சென்னை ஷோரூம் ஆரம்ப விலையில்  KUV100  மாடலை இன்று வெளியிட்டுள்ளது. இந்த மாடல் மினி SUV எனும் புதிய செக்மென்டையே உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. KUV என்ற பெயருக்கு கூல் யுடிலிட்டி வெஹிகிள் என்று அர்த்தமாம். மேலும் இந்த மாடலை கே யு வி 1 ஒ ஒ என்று உச்சரிக்க வேண்டும். 

இது மிகவும் அழகான மற்றும் கம்பீரமான் வெளிப்புற தோற்றம் கொண்ட மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள், சிறிய குரோம் கிரில் என அருமையான தோற்றத்தை தருகிறது. இரண்டாம் வரிசை  கதவுக்கான கைப்பிடி விண்ட் சீல்டில் கொடுக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் ஒரு சிறிய  XUV 500 மாடலை போல் தோற்றமளிப்பதை தவிர்க்க முடியவில்லை.

உட்புறத்தில் ஆறு இருக்கை மற்றும் ஐந்து இருக்கை என இரண்டு விதங்களில் கிடைக்கும். ஆறு இருக்கைகளை வைப்பதற்காக கியர் லிவரை டேஸ் போர்டில் வைக்கப்பட்டுள்ளது. மகிந்திரா நிறுவனத்தை பொறுத்தவரை உட்புறத்தில் இடவசதி அதிகமாக இருக்கும். அதே போல் இந்த மாடலிலும் உட்புற இடவசதி அதிகமாகவே உள்ளது.

மேலும் இந்த மாடலில் 1.2 லிட்டர் mFALCON எனும் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. mFALCON  1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 82 Bhp திறனையும் 114 Nm இழுவைதிறனையும் வழங்கும். mFALCON  1.2 லிட்டர் டீசல் எஞ்சின் 77 Bhp திறனையும் 109 Nm இழுவைதிறனையும் வழங்கும். இந்த இரண்டு எஞ்சினுமே 1198 cc கொள்ளளவு கொண்டது. இதன் டீசல் மாடல் 25.32 Kmpl மைலேஜும், பெட்ரோல்  மாடல் 18.15 Kmpl மைலேஜும் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

மகிந்திராவின் TUV 300 மாடல் விற்பனையில் சக்கை போடு போட்டு வரும் நிலையில் இந்த புதிய  KUV 100 மாடலும் பெரிய வெற்றியை பெரும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. மேலும் இந்த மாடலின் ஆன் ரோடு விலை மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

http://www.mowval.com/car-overview.php?car_company=13&car_model=120

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.