XUV500 W9 எனும் புதிய வேரியன்ட்டை வெளியிட்டது மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனம் XUV500 மாடலின் புதிய W9 எனும் வேரியன்ட்டை ரூ 15.45 லட்சம் டெல்லி ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. மஹிந்திரா நிறுவனம் W8 வேரியன்ட்டில் சில கூடுதல் உபகரணங்களை பொருத்தி இந்த புதிய W9 வேரியன்ட்டை உருவாக்கியுள்ளது. 

வேரியன்ட் வாரியாக டெல்லி ஷோரூம் விலை விவரம்:
மஹிந்திரா XUV500 W9 MT - ரூ 15.45 லட்சம் 
மஹிந்திரா XUV500 W9 AT - ரூ 16.53 லட்சம் 

இந்த மாடலில் W8 வேரியன்ட்டில் உள்ள உபகரணங்களுடன் சன்ரூப் மற்றும் பின்புற கேமரா கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி எந்த மாற்றமும் இல்லை. எஞ்சினிலும் எந்த மாற்றமும் இல்லை அதே  2.2 லிட்டர் mHawk எஞ்சினில் தான் கிடைக்கும். இந்த  என்ஜின்  140bhp (3750 rpm) திறனும்  330Nm (1600-2800rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த  மாடல் 15.1kmpl  மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது.  இந்த மாடல் AWD சிஸ்டத்துடன் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.