TUV300 மாடலின் T10 புதிய வேரியன்ட்டை வெளியிட்டது மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனம் TUV300 மாடலின் அதிக வசதிகள் கொண்ட புதிய T10 எனும் வேரியன்ட்டை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த மாடலை  மஹிந்திரா நிறுவனம் லக்சுரியஸ்லி டஃப் SUV என குறிப்பிடுகிறது. இந்த மாடலில் சில ஒப்பனை மாற்றங்களும் சில கூடுதல் வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

மஹிந்திரா TUV300 T10 மாடலில் கொடுக்கப்பட்டுள்ள வேறுபாடுகள்:

கருப்பு நிற குரோம் பினிஷ் உடன் கூடிய கிரில் மற்றும் பனி விளக்குகள் 
மெட்டாலிக் க்ரே அலாய் வீல் 
மெட்டாலிக் க்ரே ஸ்பேர் வீல் கவர் 
மெட்டாலிக் க்ரே ரூப் ரயில் 
GPS உடன் கூடிய 7"  இன்ச் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் 
புதிய தோல் இருக்கை
மேலும் இந்த மாடல் பேர்ல் வெள்ளை வண்ணத்திலும் கூடுதலாக வெளியிடப்பட்டுள்ளது.

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை அதே 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் தான் கிடைக்கும். இது 100 bhp @3750 rpm திறனும் 240 Nm @ 1600-2800 rpm டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. மேலும் இந்த மாடல் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ் மிஷனில் கிடைக்கும். இதன் விலை விவரங்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.