மகிந்திரா TUV 300 மாடலின் படங்கள் இணையத்தில் வெளியானது

மகிந்திரா TUV  மாடல் வெளியாவதற்கு 10 நாட்களே இருக்கும் நிலையில் இதன் படங்கள் இணையத்தில் வெளியானது.  விளம்பரம் எடுப்பதற்காக இந்த மாடல் கொண்டுவரும்போது இந்த படங்கள் எடுக்கப்படிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படங்களை டீம் BHP உறுப்பினர் யாரோ ஒருவர் எடுத்து வெளியிட்டுள்ளார்.

முன்புற கிரில் ஜீப்  செரோக்கி மாடலில் இருப்பது போல் உள்ளது. பின்புறம் பார்பதற்கு குவாண்டோ போன்றே தோற்றமளிக்கிறது. முழுமையாக இந்த மாடல் கம்பீரமான தோற்றமளிக்கிறது என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ஏற்கனவே மகிந்திரா நிறுவனம் ஸ்டீரிங் வீலின் படத்தை மட்டும் வெளியிட்டிருந்தது.  இந்த மாடல் சென்னையில் உள்ள மகிந்திரா ரிசர்ச் வேலியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் முற்றிலுமாக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடல் 4 மீட்டருக்கு குறைவான  நீளம் கொண்ட மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல்  புத்தம் புதிய  1.5 லிட்டர் mHawk80 டீசல் என்ஜினில் கிடைக்கும். இந்த என்ஜின் அதிக செயல்திறன் கொண்ட என்ஜினாக இருக்கும். மேலும் இந்த என்ஜின் 80 bhp திறனை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலின் வடிவம் ராணுவ டாங்கின் உருவத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக மகிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் இந்த மாடல் 7 முதல் 10 லட்சம் விலையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.