டீலர்ஷிப்பை வந்தடைந்தது புதிய மஹிந்திரா TUV300 பிளஸ்

மஹிந்திரா நிறுவனம் TUV300 மாடலின் அதிக வீல் பேஸ் கொண்ட மாடலை நீண்ட நாட்களாகவே சோதனை செய்து வருகிறது. இந்த மாடலை TUV300 பிளஸ் என்ற பெயரில் வெளியிட இருப்பதும் அனைவரும் அறிந்ததே. மேலும் இதன் சோதனை ஒட்டப்படங்களும் அடிக்கடி வெளியாகி வந்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த புதிய  TUV300 பிளஸ் மாடல் பெரும்பாலான மஹிந்திரா ஷோரூம்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதன் உட்புற மற்றும் வெளிப்புற வடிவமைப்பு அப்படியே TUV300 மாடல் போலவே உள்ளது. ஆனால் இதன் நீளம் தான் அதிகம். அதேபோல் இதன் பின்புறமும் TUV300 மாடலை விட அதிக சரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. P4 வேரியன்ட் மாடல் தான் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது பேஸ் வேரியன்ட் என்பதால் எந்த ஒரு வசதிகளும் இல்லை. மஹிந்திரா நிறுவனம் டாக்ஸி சந்தையை மட்டுமே கவனத்தில் கொண்டு P4 வேரியன்ட்டில் மட்டுமே வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக வசதிகள் கொண்ட மிட் மற்றும் டாப் வேரியன்ட் மாடல்கள் வெளியிடப்படுமா என்பது தெரியவில்லை. 

இந்த மாடலில் ஸ்கார்பியோ மற்றும் XUV500 மாடலில் உள்ள அதே 2.2 லிட்டர் mHawk எஞ்சின் தான் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த எஞ்சின் 120Bhp திறனையும் 280Nm இழுவைத்திறனையும் மட்டுமே வழங்கும். மேலும் இந்த மாடலில் ஆறு ஸ்பீட் கொண்ட மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் ஒரு சில வாரங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.