மேம்படுத்தப்பட்ட புதிய அம்சங்களுடன் வெளியிடப்பட்டது மஹிந்திரா XUV500

மஹிந்திரா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட பல தொழில்நுட்பங்களுடன் கூடிய XUV500 மாடலை வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் ஆன்ட்ராய்டு ஆட்டோ, கனக்டட் ஆப்ஸ், எமெர்ஜென்ஸி கால், ஒன் டச் லேன் இண்டெகேட்டர் மற்றும் ஈகோ சென்ஸ் ஆகிய தொழில் நுட்பம் கொண்ட புதிய 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் W4 வேரியண்ட்டை தவிர மற்ற அனைத்து வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும். 

இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ள கனக்டட் ஆப்ஸ் மற்றும் ஈகோ சென்ஸ் போன்ற சில தொழில்நுட்பங்கள் ஆட்டோமொபைல் துறைக்கே புதிது. கனக்டட் ஆப்ஸ் மூலம் உங்கள் மொபைலில் இல்லாத ஆப்சயும் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் மூலம் பயன்படுத்த முடியும். மற்றும்  ஈகோ சென்ஸ் தொழில்நுட்பம் எரிபொருள் சிக்கனம், வேகம், ஓட்டுதல் தன்மை மற்றும் புகை வெளியீடு போன்றவற்றை ஓட்டுனருக்கு தெரிவித்துக்கொண்டே இருக்கும். இதன் மூலம் வாகனத்தை சிறந்த முறையில் கையாளலாம் மேலும் சிறந்த எரிபொருள் சிக்கனத்தையும் பெற முடியும்.

இந்த மாடல்  2.2 லிட்டர் எஞ்சினில் கிடைக்கும். இந்த எஞ்சின் 140bhp (3750 rpm) திறனும்  330Nm (1600-2800rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த  மாடல் 15.1kmpl  மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது. டெல்லி மற்றும் சில மாநிலங்களில் இந்த மாடல் 1.99  லிட்டர் எஞ்சினில் கிடைக்கும். மேலும் இந்த மாடல் புதிய பிரவுன் வண்ணத்திலும் கிடைக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.