நவம்பர் 25 அன்று வெளியிடப்படும் மகிந்திரா - XUV 500 ஆட்டோமேடிக்

மகிந்திரா ஸ்கார்பியோ மற்றும் TUV300 மாடல்களின் வெற்றியை தொடர்ந்து XUV 500 மாடலின் ஆட்டோமேடிக் வேரியன்டை மகிந்திரா நிறுவனம் நவம்பர் 25 அன்று வெளியிட இருக்கிறது. மேலும் ஹுண்டாய் க்ரெடா மாடலின் போட்டியை சமாளிக்கவும்  XUV 500 ஆட்டோமேடிக் மாடலை மகிந்திரா நிறுவனம் வெளியிட இருக்கிறது.

மகிந்திரா ஸ்கார்பியோ ஆட்டோமேடிக்  மாடலில் உள்ள அதே 6 ஸ்பீட் கியர் பாக்ஸ் இதிலும் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ஜினில் எந்த மாற்றமும் செய்யப்பட்டிருக்காது அதே 2.2 லிட்டர் mHawk என்ஜின் தான் பொருத்தப்பட்டிருக்கும். இந்த  என்ஜின்  140bhp (3750 rpm) திறனும்  330Nm (1600-2800rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. 

மேலும் இதன் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் இரண்டு மற்றும் நான்கு வீல் டிரைவ் என இரண்டு சிஸ்டத்திலும் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.