ரூ. 9.5 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது மகிந்திரா எலெக்ட்ரிக் வெரிட்டோ

இந்தியாவின் ஒரே ஒரு எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு  நிறுவனமான மகிந்திரா எலெக்ட்ரிக் வெரிட்டோ மாடலை ரூ. 9.5 லட்சம் டெல்லி ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் D2, D4 மற்றும் D6 என மூன்று வேரியண்டுகளில் கிடைக்கும். இது மகிந்த்ராவின்  இரண்டாவது முழுமையான எலெக்ட்ரிக் மாடல் ஆகும். ஏற்கனவே e2o எனும் எலெக்ட்ரிக் மாடலை இந்தியாவில் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.  

இந்த மாடல் 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த மாடல் அதிகபட்சமாக 85 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் மற்றும் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால்110 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும். பேட்டரியை முழுமையாக  சார்ஜ் செய்ய 7 முதல் 8 மணி நேரம் ஆகும். விரைவாக அதாவது ஒன்று முதல் ஒன்றரை மணிநேரத்தில் சார்ஜ் செய்யும் வசதி D6 வேரியண்டில் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் 72V எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 41ps திறனையும் 91 Nm  இழுவைதிறனையும் வழங்கும். 

வேரியன்ட் வாரியாக டெல்லி ஷோரூம் விலை விவரம்:

D2 - ரூ. 9.5 லட்சம்
D4 - ரூ. 9.75 லட்சம்
D6 - ரூ. 10.0 லட்சம்

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.