KUV 100 மாடலின் முதல் டீசர் படத்தை வெளியிட்டது மகிந்திரா

மகிந்திரா நிறுவனம் S 101 என்ற குறியீட்டு பெயரால் அழைக்கப்பட்டு வந்த KUV 100 மாடலின் அதிகாரப்பூர்வ முதல் டீசர் படத்தை வெளியிட்டுள்ளது. இந்த மாடல் இதற்கு முன்பு XUV 100 என்ற பெயரால் அழைக்கப்படும் என்று ஆட்டோ மொபைல் வட்டாரங்கள் தெரிவித்தன ஆனால் தற்போது KUV 100 என்ற பெயரால் அழைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த மாடலின் விளம்பர படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட படங்கள் சில நாட்களுக்கு முன்பு தான் இணையத்தில் கசிந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் TUV 300 மாடலில் உள்ள 1.5 லிட்டர் mHawk  டீசல் எனிஜின்களில் கிடைக்கும். 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 75 Bhp திறனையும் 110 Nm இழுவைதிறனையும் வழங்கும். 1.5 லிட்டர் mHawk  டீசல் எஞ்சினின் திறன் TUV 300 மாடலில் உள்ளது போல் அல்லாமல் இந்த மாடலுக்கு ஏற்றவாறு சற்று மாற்றப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாடல் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசனிலும் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள மௌவளுடன் தொடர்பில் இருங்கள். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.