யுரோ NCAP சிதைவு சோதனையில் 3 ஸ்டார் தர மதிப்பீட்டை பெற்றது மாருதி பலேனோ

ஐரோப்பாவில் விற்பனை செய்யப்படும் மாருதி சுசுகி பலேனோ  மாடல் யுரோ NCAP சிதைவு  சோதனையில் 3 ஸ்டார் தர மதிப்பீட்டை  பெற்றுள்ளது. இது மிகச்சிறந்த மதிப்பு இல்லை என்றாலும் மற்ற இந்திய கார்களை ஒப்பிடும் போது இது ஒரு சிறந்த மதிப்பாகவே கருதப்படுகிறது.

ஐரோப்பாவில் இந்த மாடல் ஆறு காற்றுப்பைகளுடன் கிடைக்கிறது ஆனால் இந்தியாவில் 2 காற்றுப்பைகளுடன் தான் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் இந்தியாவில் 1.2 லிட்டர்  K-சீரீஸ்   பெட்ரோல் என்ஜின்   மற்றும் 1.3 லிட்டர் DDiS190  டீசல் என்ஜின்களில் கிடைக்கிறது.

இதன் பெட்ரோல் என்ஜின்  83 bhp (6000 rpm) திறனும்  115Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இதன் பெட்ரோல் மாடலின் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் இரண்டுமே  21.4 மைலேஜ்   தரும் என ARAI சான்றளிதுள்ளது.

இதன்  டீசல்  என்ஜின்  75bhp (4000 rpm) திறனும் 190Nm (2000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் டீசல்  மாடல் 27.39kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது . 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.