2016 ஆம் ஆண்டு முதல் கார் விலையை உயர்த்தும் மாருதி சுசுகி மற்றும் ஹுண்டாய்

உற்பத்தி செலவீனத்தை அடிப்படையாக கொண்டு  மாருதி சுசுகி மற்றும் ஹுண்டாய் நிறுவனங்கள் தனது கார்களின் விலையை அடுத்த ஆண்டு முதல் உயர்த்துகிறது.

ஹுண்டாய் நிறுவனம் இயான் மற்றும் கிராண்ட் i 10 மாடல்களுக்கு 1.5 சதவீதமும் சான்டா ஃபி மாடலுக்கு 3 சதவீதமும் விலையை உயர்த்துகிறது. தோராயமாக இயான் மற்றும் கிராண்ட் i 10 மாடல்களுக்கு ரூ.8000 முதல் 15000 வரையும் சான்டா ஃபி மாடலுக்கு ரூ.30000 வரையும் விலை உயர்த்தப்படும். அதேபோல் மற்ற மாடல்களின் விலையும் உயர்த்தப்படும் ஆனால் எலைட் i 20 மற்றும் க்ரெடா மாடல்களின் விலையை கடந்த அக்டோபர் மாதம் தான் உயர்த்தியதால் அதன் விலையில் மாற்றம் இருக்காது.

அதேபோல் மாருதி சுசுகி நிறுவனமும் தனது அனைத்து மாடல்களின் விலையையும் உயர்த்துகிறது. அதிகபட்சம் ரூ.20000 வரை உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.