மாருதி பிராண்டில் கரோலா மாடலையும் டொயோடா பிராண்டில் ப்ரீஸா மற்றும் பலேனோ மாடல்களையும் விரைவில் பார்க்கலாம்

மாருதி சுசூகி மற்றும் டொயோடா நிறுவனங்கள் ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்துள்ளது. அதன்படி, சில மாடல்களையும் ஹைபிரிட் தொழில்நுட்பத்தையும் பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளது. இவ்விரு நிறுவனங்களும் ஏற்கனவே எலெக்ட்ரிக் மாடல்களை இந்தியாவில் இணைந்து உருவாக்க ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய ஒப்பந்தத்தின் படி இவ்விரு நிறுவனங்களும் கரோலா, ப்ரீஸா மற்றும் பலேனோ மாடல்களை பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளது. எனவே விரைவில் மாருதி பிராண்டில் கரோலா மாடலையும் டொயோடா பிராண்டில் ப்ரீஸா மற்றும் பலேனோ மாடல்களையும் இந்திய சாலைகளில் காணலாம். இவ்வாறு வெளியிடப்பட்டாலும் சில ஒப்பனை மாற்றங்களை இந்த மாடல்கள் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இவ்விரு நிறுவனங்களின் விற்பனையும் கணிசமாக உயரும்.

இதே போல் ரெனோ மற்றும் நிசான் நிறுவனங்கள் இந்தியாவில் மாடல்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ரெனோ டஸ்ட்டர் மற்றும் நிசான் டெர்ரானோ ஆகிய இரு மாடல்களும் ஒரே மாடல் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.