ரூ 5.45 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட மாருதி சுசூகி பலேனோ

மாருதி  சுசூகி நிறுவனம் மேம்படுத்தப்பட்ட பலேனோ மாடலை ரூ 5.45 லட்சம் சென்னை ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, அதேபோல் விலையிலும் அதிக மாற்றங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வேரியன்ட் வாரியாக சென்னை ஷோரூம் விலை விவரம்:
பெட்ரோல்

  • மாருதி  சுசூகி பலேனோ Sigma- ரூ 5.45 லட்சம் 
  • மாருதி  சுசூகி பலேனோ Delta- ரூ 6.31 லட்சம் 
  • மாருதி  சுசூகி பலேனோ Delta CVT- ரூ 7.63 லட்சம் 
  • மாருதி  சுசூகி பலேனோ Zeta- ரூ 6.93 லட்சம் 
  • மாருதி  சுசூகி பலேனோ Zeta CVT- ரூ 8.25 லட்சம் 
  • மாருதி  சுசூகி பலேனோ Alpha- ரூ 7.56 லட்சம் 
  • மாருதி  சுசூகி பலேனோ Alpha CVT- ரூ 8.88 லட்சம் 

டீசல்

  • மாருதி  சுசூகி பலேனோ Sigma- ரூ 6.69 லட்சம் 
  • மாருதி  சுசூகி பலேனோ Delta- ரூ 7.46 லட்சம் 
  • மாருதி  சுசூகி பலேனோ Zeta- ரூ 8.07 லட்சம் 
  • மாருதி  சுசூகி பலேனோ Alpha- ரூ 8.70 லட்சம் 

இந்த மேம்படுத்தப்பட்ட மாடலில் புதிய முன்புற பம்பர், புதிய முகப்பு கிரில், LED முகப்பு விளக்குகள் மற்றும் புதிய அலாய் வீல் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. இதன் உட்புறம் ப்ளூ மட்டும் கருப்பு வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் புதிய இன்போடைன்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, அதே 1.2 லிட்டர்  K-சீரீஸ் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.3 லிட்டர் DDiS190  டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும். இதன் பெட்ரோல் என்ஜின்  83 bhp (6000 rpm) திறனும்  115Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது மற்றும் இதன்  டீசல்  என்ஜின்  75bhp (4000 rpm) திறனும் 190Nm (2000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த இரண்டு எஞ்சின் மாடல்களும் ஐந்து ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் கிடைக்கும் மற்றும் பெட்ரோல் எஞ்சின் மாடல் கூடுதலாக CVT ட்ரான்ஸ்மிஷனிலும் கிடைக்கும். பலேனோ RS மாடல் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினில் கிடைக்கும். இந்த எஞ்சின் 102 Bhp @ 5,500rpm திறனையும் 150 Nm @ 1,700-4,500rpm இழுவைதிறனையும் வழங்கும்.

இந்த மாடல் ஹூண்டாய் எலைட் i20, ஹோண்டா ஜாஸ் மற்றும் வோல்க்ஸ் வேகன் போலோ போண்டா பிரீமியம் ஹேட்ச் மாடல்களும் போட்டியாக இருக்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.