ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நெக்ஸா ஷோரூம்களில் விற்பனை செய்யப்படும் சியாஸ்

மாருதி சுசூகி நிறுவனம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சியாஸ் மாடலை நெக்ஸா ஷோரூம்களில் விற்பனை செய்ய உள்ளது. நீண்ட நாட்களாகவே இந்த மாற்றம் எதிர்பார்க்கப்பட்டு வந்தது தற்போது இதை மாருதி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மாடலில் எந்த மாற்றமும் இல்லை புதிதாக ப்ளூ வண்ணத்தில் மட்டும் கிடைக்கும்.

இந்த மாடலின் காற்றுப்பை மற்றும் ABS இல்லாத வேரியண்டுகள் நிறுத்தப்படுகிறது. மேலும் இந்த மாடல் இனிமேல் சிக்மா, டெல்டா, ஸிட்டா மற்றும் ஆல்பா என்ற வேரியண்டுகளில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்போது இந்த மாடல் 1.4 லிட்டர்  பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின்களில் கிடைக்கிறது.  இதன் பெட்ரோல் என்ஜின்  92bhp (6200 rpm) திறனும்  130Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இதன் பெட்ரோல் மாடலின் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் 20.73 மைலேஜும்  ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன்  19.12 மைலேஜும்  தரும் என ARAI சான்றளிதுள்ளது. 

இதன்  டீசல்  என்ஜின்  89bhp (4000 rpm) திறனும் 200Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் டீசல்  மாடல் 26.21kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது .

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.