ASEAN NCAP சிதைவு சோதனையில் 4 ஸ்டார் தர மதிப்பீட்டை பெற்றது மாருதி சுசுகி சியாஸ் மற்றும் எர்டிகா

மகிழ்ச்சி அளிக்கும் விதமாக மாருதி சுசுகி சியாஸ் மற்றும் எர்டிகா கார்கள் ASEAN NCAP சிதைவு  சோதனையில் 4 ஸ்டார் தர மதிப்பீட்டை பெற்றுள்ளது. இந்த இரண்டு கார்களும்  பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 4 ஸ்டார் தர மதிப்பீட்டையும் சிறியவர்களுக்கான பாதுகாப்பில் 2 ஸ்டார் தர மதிப்பீட்டையும் பெற்றுள்ளது. நிறைய இந்திய கார்கள்  0 ஸ்டார் தர மதிப்பீட்டை சமீபகாலமாக பெற்று வந்த நிலையில் சியாஸ் மற்றும் எர்டிகா 4 ஸ்டார் தர மதிப்பீட்டை பெற்றது சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளது.

இந்த சோதனையில் காற்றுப்பைகள், சீட் பெல்ட் மற்றும்  ABS ஆகியவை உள்ள மாடல் பயன் படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவல் மாருதி சுசுகி நிறுவனத்திற்கு மிகவும் நல்ல செய்தியாக இருக்கும். 

பெரும்பாலான நாடுகளில் சிதைவு சோதனைகளுக்கென கட்டுப்பாடுகள் உள்ளது. ஆனால் இந்தியாவில் எந்த ஒரு கட்டுப்படும் இல்லை. 2017 ஆம் ஆண்டு Bharat New Car Assessment Programme எனும் புதிய கட்டுப்பாடு உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.