மாருதி சுசூகி இக்னிஸ் மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது

மாருதி சுசூகி நிறுவனம் இக்னிஸ் மாடலின் முன்பதிவை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. ரூ.11,000 முன்பணமாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இதன் விலை விவரம் ஜனவரி 13 ஆம் தேதி வெளியிடப்படும். இந்த மாடல் மாருதியின் நெக்ஸா ஷோரூம் வாயிலாக விற்பனை செய்யப்படும். இந்த மாடல் முதலில் 2016 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தியது. மேலும் இந்த மாடல் 9 விதமான வண்ணங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாடல் 4 மீட்டருக்கு குறைவான ஒரு கிராஸ் ஓவர் மாடல் ஆகும். இந்த மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.3 டீசல் என்ஜின்களில் கிடைக்கும்.  இதன் பெட்ரோல் என்ஜின்  83 bhp திறனையும் 115 Nm இழுவைதிறனையும் வழங்கும். இதன் டீசல் என்ஜின் 74 bhp திறனையும் 190 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் ஆட்டோமேடிக் கியர் பாக்சிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாடல்  5 முதல் 8 லட்சம் விலை கொண்டதாகவும் மகிந்திரா KUV 100 மாடலுக்கு போட்டியாகவும்  இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் மாருதி பலேனோ மற்றும் S கிராஸ் மாடல்களிக்கு இடையிலான விலையில் நிலைநிறுத்தப்படும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.