தீபாவளி பண்டிகை காலத்தில் வெளியிடப்படும் மாருதி சுசுகி இக்னிஸ்

மாருதி சுசுகி நிறுவனம் இக்னிஸ் மாடலை தீபாவளி பண்டிகை காலத்தில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. காம்பேக்ட் SUV மாடல்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருப்பதால் அனைத்து நிறுவனங்களும் காம்பேக்ட் SUV மாடலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மாருதி சுசுகி நிறுவனம் விட்டாரா ப்ரீஸா காம்பேக்ட் SUV மாடலையும் இக்னிஸ் எனும் மினி SUV மாடலையும் விரைவில் வெளியிட இருக்கிறது.

இந்த மாடல் 4 மீட்டருக்கு குறைவான ஒரு கிராஸ் ஓவர் மாடல் ஆகும். இந்த மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.3 டீசல் என்ஜின்களில் கிடைக்கும்.  இதன் பெட்ரோல் என்ஜின்  83 bhp திறனையும் 115 Nm இழுவைதிறனையும் வழங்கும். இதன் டீசல் என்ஜின் 74 bhp திறனையும் 190 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் ஆட்டோமேடிக் கியர் பாக்சிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த மாடல் மாருதி பலேனோ மற்றும் S கிராஸ் மாடல்களிக்கு இடையிலான விலையில் நிலைநிறுத்தப்படும். மேலும் 5 முதல் 9 லட்சம் விலை கொண்டதாக இருக்கும். இது மகிந்திரா KUV 100 மாடலுக்கு போட்டியாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.