விட்டாரா ப்ரீஸா காம்பேக்ட் SUV மாடலின் உற்பத்தியை அதிகரிக்கும் மாருதி சுசுகி

மாருதி சுசுகி நிறுவனம் ஜூலை மாதம் முதல் விட்டாரா  ப்ரீஸா காம்பேக்ட் SUV  மாடலின் உற்பத்தியை மதத்திற்கு 10,000 யூனிட்டுகளாக அதிகரிக்கிறது. இதற்கு முன்னர் வருடத்திற்கு 100000 யூனிட்டுகளாக இருந்தது தற்போது வருடத்திற்கு 120000 யூனிட்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காம்பேக்ட் SUV மாடல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு  இருப்பதாலும், மாருதியின் நம்பகத்தன்மை, விற்பனைக்கு பிந்தைய சேவை, சிறப்பான வடிவமைப்பு போன்றவற்றாலும் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது இந்த மாடல். 

இதன் காத்திருப்பு காலம் 6 மாதம் வரை இருக்கிறது. எனவே காத்திருப்பு காலத்தை குறைக்க மாருதி சுசுகி நிறுவனம் இதன் உற்பத்தியை அதிகரித்துள்ளது. 

இதில் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 89bhp திறனும்  200Nm டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடலில் 5 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ் மிசன் கியர் பாக்ஸ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் 24.3 Kmpl  மைலேஜ் தரும் என ARAI  சான்றளிதுள்ளது. மேலும் இந்த மாடல் சிவப்பு, ப்ளூ,  வெள்ளை, சில்வர், கிரே, மஞ்சள், மஞ்சள் மற்றும் வெள்ளை கலந்த கலவை, ப்ளூ மற்றும் வெள்ளை கலந்த கலவை மற்றும் கருப்பு மற்றும் சிவப்பு கலந்த கலவை என மொத்தம் 9 வண்ணங்களில் கிடைக்கும். 

இந்த மாடல் ஒரு முழுமையான SUV போன்ற தோற்றத்தை தருகிறது.  புதிய தலைமுறைக்கு ஏற்றவாறு ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.