ரூ 8.49 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட மாருதி சுஸுகி S-கிராஸ்

மாருதி சுசூகி நிறுவனம் மேம்படுத்தப்பட்ட S-கிராஸ் மாடலை ரூ 8.49 லட்சம் டெல்லி ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் சில ஒப்பனை மாற்றங்களும் கூடுதலாக மைல்டு ஹைபிரிட் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் முதலில் 2016 ஆம் ஆண்டு பாரிஸ் மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

வேரியன்ட் வாரியாக டெல்லி ஷோரூம் விலை விவரம்:
சிக்மா - ரூ 8.49 லட்சம் 
டெல்டா - ரூ 9.39 லட்சம்
ஸிட்டா - ரூ 9.98 லட்சம்
ஆல்பா -  ரூ 11.29 லட்சம்

இந்த மாடலில் வெளிப்புற தோற்றத்தில் சில ஒப்பனை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது குறிப்பாக முன்புற க்ரில் அமைப்பு முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய க்ரில் அமைப்பு பார்ப்பதற்கு சற்று கம்பீரமான தோற்றத்தை தருகிறது. உட்புறத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் ஐரோப்பாவில் 1.0 லிட்டர் பூஸ்டர் ஜெட் என்ஜின் மற்றும் 1.6 லிட்டர் மாட்டி ஜெட் டீசல் என்ஜினில் கிடைக்கிறது.

ஆனால் இந்தியாவில் இந்த மாடல் அதே 1.3 லிட்டர் டீசல் எஞ்சினில் மட்டுமே கிடைக்கும். மற்றும் கூடுதலாக மைல்டு ஹைபிரிட் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே இந்த மாடலில் கிடைத்த 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்சனும் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த  1.3 லிட்டர் டீசல் எஞ்சின் 89bhp (4000 rpm) திறனும்  200Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடல் 25.1 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது. மேலும் இதன் முந்தய மாடல் 23.65kmpl மைலேஜ் மட்டுமே கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் ப்ளூ, வெள்ளை, பிரௌன், சில்வர் மற்றும் க்ரே என ஐந்து வண்ணங்களில் கிடைக்கும். இந்த மாடல் ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் ரெனோ டஸ்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.