மாருதி சுசுகி ஸ்விப்ட் குலோரி எடிசன்

அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது மாருதி சுசுகி  ஸ்விப்ட் குலோரி எடிசன். இது பண்டிகை காலத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் சிவப்பு மற்றும் கருப்பு வண்ணத்தில் அழகிய வேலைபாடுகளும் வண்டியை சுற்றிலும் அடிபாகத்தில் பிளாஸ்டிக் கிலாடிங்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

உட்புறத்திலும் சிவப்பு மற்றும் கருப்பு வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு காற்றுப்பைகளும் குலோரி எடிசன் சிறப்பு தரை விரிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பதிப்பு VXi மற்றும் VDi வேரியண்டுகளில் மட்டும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்ஜினில் எந்த மாற்றமும் இருக்காது. அதே  1.2 லிட்டர்  K-சீரீஸ்   பெட்ரோல் என்ஜின்   மற்றும் 1.3 லிட்டர் DDiS  டீசல் என்ஜினில் கிடைக்கும். இதன் பெட்ரோல் என்ஜின்  84.3bhp (6000 rpm) திறனும்  115Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இதன் பெட்ரோல் மாடல்  20.04 மைலேஜ்   தரும் என ARAI சான்றளிதுள்ளது .இதன்  டீசல்  என்ஜின்  75bhp (4000 rpm) திறனும் 190Nm (2000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.இதன் டீசல்  மாடல் 25.2kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது . 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.