குளோபல் NCAP சிதைவு சோதனையில் 2 ஸ்டார் தர மதிப்பீட்டை பெற்று ஏமாற்றமளித்தது மாருதி சுசூகி ஸ்விப்ட்

மாருதி சுசூகி ஸ்விப்ட் மாடல் குளோபல் NCAP சிதைவு சோதனையில் 2 ஸ்டார் தர மதிப்பீட்டை மட்டுமே பெற்று ஏமாற்றமளித்துள்ளது. இந்த மாடல் பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் என இருவருக்குமான பாதுகாப்பிலும் 2 ஸ்டார் தர மதிப்பீட்டை மட்டுமே பெற்றுள்ளது.

இந்த சோதனையில் இரண்டு காற்றுப்பை, ABS மற்றும் ISOFIX Child Restraint System  உடன் கூடிய மாருதி சுசூகி ஸ்விப்ட் மாடல் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மாடலின் தரமில்லாத கட்டுமானத்தால் ஓட்டுனரின் நெஞ்சுப் பகுதியில் பலத்த சேதத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த சோதனையில் மணிக்கு 64 கிலோ மீட்டர் வேகத்தில் கார் மோதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சோதனையில் டாடா நெக்ஸன் மற்றும் மாருதி சுசூகி விட்டாரா ப்ரீஸா ஆகிய மாடல்கள் 4 ஸ்டார் தர மதிப்பீட்டை பெற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் மாருதி சுசூகி ஸ்விப்ட் மாடல் இந்தியாவில் மிக அதிகமாக விற்பனையாகும் மாடல்களில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.