விரைவில் வெளியிடப்படும் மாருதி சுசுகி விட்டாரா ப்ரீஸா AMT காம்பேக்ட் SUV

மாருதி சுசுகி நிறுவனம் விட்டாரா ப்ரீஸா காம்பேக்ட் SUV மாடலை AMT டிரான்ஸ்மிஷன் உடன் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புதிய ஆரஞ்சு வண்ணத்தில் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், இதன் சோதனை ஒட்டப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடலில் கூடுதலான AMT டிரான்ஸ்மிஷன் தவிர வேறு எந்த மாற்றங்களும் இருக்காது. இதன் மேனுவல் மாடலில் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 89bhp திறனும்  200Nm டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இதே எஞ்சின் ஆப்ஷனில் தான் AMT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காம்பேக்ட் SUV மாடல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு  இருப்பதாலும், மாருதியின் நம்பகத்தன்மை, விற்பனைக்கு பிந்தைய சேவை, சிறப்பான வடிவமைப்பு போன்றவற்றாலும் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது இந்த மாடல். 

டாடா நெக்ஸன் மற்றும் போர்டு ஈக்கோஸ்போர்ட் போன்ற மாடல்கள் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனில் கிடைப்பதால், மாருதி நிறுவனமும் விட்டாரா ப்ரீஸா AMT மாடலை வெளியிடும் முனைப்பில் உள்ளது. 

Image Source: CarAndBike.com

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.