ரூ.7.23 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது மாருதி சுசுகி விட்டாரா ப்ரீஸா காம்பேக்ட் SUV

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட  விட்டாரா ப்ரீஸா காம்பேக்ட் SUV  மாடலை ரூ.7.23  லட்சம் சென்னை  ஷோரூம் ஆரம்ப விலையில் மாருதி சுசுகி நிறுவனம் வெளியிட்டது. இந்த  இந்த மாடல் 2016 டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.  நீண்ட நாட்களுக்கு முன்பே இதன் கான்செப்ட் மாடல் வெளியிடப்பட்டது. இந்த மாடல் போர்ட் ஈக்கோ  ஸ்போர்ட் மற்றும் மகிந்திரா TUV 300 மாடல்களுக்கு  போட்டியாக இருக்கும்.

இந்த மாடல் ஒரு முழுமையான SUV போன்ற தோற்றத்தை தருகிறது.  புதிய தலைமுறைக்கு ஏற்றவாறு ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.  தற்போது இந்த மாடல் டீசல் என்ஜினில்  மட்டும்  கிடைக்கும். பிறகு பெட்ரோல் என்ஜின் மாடல் வெளியிடப்படும். 

இதில் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 89bhp திறனும்  200Nm டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடலில் 5 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ் மிசன் கியர் பாக்ஸ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் 24.3 Kmpl  மைலேஜ் தரும் என ARAI  சான்றளிதுள்ளது. மேலும் இந்த மாடல் சிவப்பு, ப்ளூ,  வெள்ளை, சில்வர், கிரே, மஞ்சள், மஞ்சள் மற்றும் வெள்ளை கலந்த கலவை, ப்ளூ மற்றும் வெள்ளை கலந்த கலவை மற்றும் கருப்பு மற்றும் சிவப்பு கலந்த கலவை என மொத்தம் 9 வண்ணங்களில் கிடைக்கும். 

வேரியன்ட் வாரியாக சென்னை ஷோ ரூம் விலை விவரம்:
LDi - ரூ. 7.23 லட்சம்  
LDi(O) - ரூ. 7.36 லட்சம்  
VDi - ரூ. 8.00 லட்சம்  
VDi(O) - ரூ. 8.13 லட்சம்  
ZDi - ரூ. 8.79 லட்சம்  
ZDi+ - ரூ. 9.79 லட்சம்    

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.