மாருதி சுசுகி விட்டாரா ப்ரீஸா காம்பேக்ட் SUV மாடலின் படங்கள் கசிந்தது

மாருதி சுசுகி விட்டாரா ப்ரீஸா காம்பேக்ட் SUV மாடலின் படங்கள் வெளியீட்டிற்கு முன்பே இணையத்தில் கசிந்தது. மாருதி சுசுகி நிறுவனம் அதிகாரபூர்வமாக விட்டாரா  ப்ரீஸா காம்பேக்ட் SUV மாடலின் டீசர் படத்தை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது.  நீண்ட நாட்களுக்கு முன்பே இதன் கான்செப்ட் மாடல் வெளியிடப்பட்டது. இந்த மாடல் போர்ட் இகோ ஸ்போர்ட் மற்றும் மகிந்திரா TUV 300 மாடல்களுக்கு  போட்டியாக இருக்கும். 

இந்த மாடல் ஒரு முழுமையான SUV போன்ற தோற்றத்தை தருகிறது. இந்த மாடல் விட்டாரா மாடலின் தோற்றத்தை போலவே உள்ளது.  உட்புறத்தில் அதிகமாக பலேனோ மற்றும் S கிராஸ் மாடல்களின் பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த மாடலில் 1.3 லிட்டர் டீசல் என்ஜின்  மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். 5 ஸ்பீட் கொண்ட மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் இதில் கிடைக்குமா என்பது பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை.

மேலும் இந்த மாடல் டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்யப்படும். இத்துடன் இக்னிஸ், க்ராண்ட் விடார மற்றும் 7 இருக்கை கொண்ட வேகன் R போன்ற மாடல்களையும் காட்சிக்கு வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.