மெர்சிடிஸ் பென்ஸ் - AMG GT S மாடல் ரூ.2.4 கோடி விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் AMG GT S மாடலை ரூ.2.4 கோடி டெல்லி ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டது. ஜெர்மன் நாட்டை சேர்ந்த சொகுசு கார் நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் 2015 ஆம் ஆண்டு முடிவுக்குள் 15 மாடல்களை வெளியிடுவதாக இருந்தது. ஏற்கனவே 12 மாடல்களை இந்த வருடத்தில் மட்டும் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த AMG GT S மாடல் AMG பிரண்டின் ஐந்தாவது மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த மாடலில் 4 லிட்டர் ட்வின் டர்போ V 8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின்  510 bhp திறனையும் 650 Nm இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடல் பின்புற வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. மேலும் இந்த மாடலில் 7 ஸ்பீட் கொண்ட டியுவல் க்ளட்ச் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மாடல் மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.7 வினாடிகளிலும் மற்றும் அதிக பட்சமாக மணிக்கு 310 கிலோமீட்டர் வேகம் வரையும் செல்லும் வல்லமை கொண்டது.இந்த மாடல் கூபே மாடல் வகையை சார்ந்தது. மேலும் இந்த மாடலில் இரண்டு பேர் மட்டுமே அமர முடியும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.