வெளிப்படுத்தப்பட்டது மெர்சிடிஸ் பென்ஸ் AMG GT மற்றும் GT-C ரொட்ஸ்டெர் மாடல்கள்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்  AMG GT மற்றும் GT-C ரொட்ஸ்டெர் மாடல்களை வெளிப்படுத்தியுள்ளது. இது AMG GT மாடலின் திறந்த மேற்கூரை கொண்ட மாடல் ஆகும். AMG GT மற்றும் GT-C மாடல்களுக்கு திறனில் மற்றும் தான் வேறுபாடு மற்ற எந்த மாற்றமும் கிடையாது. மெர்சிடிஸ் பென்ஸ்  நிறுவனம் ஏற்கனவே GT குடும்பத்தில் GT, GT-S கூப், GT-R மற்றும் GT3 ரேஸ் மாடல் போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

இந்த மாடலில் 4.0 லிட்டர் கொண்ட ட்வின் டர்போ என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. GT  மாடல்  576 Bhp  திறனையும் 630 Nm  இழுவைத்திறனையும் கொண்டது. மற்றும் GT-C  மாடல்  557 Bhp  திறனையும் 680 Nm  இழுவைத்திறனையும் கொண்டது. இந்த திறன் 7 ஸ்பீட் கொண்ட டியூவல் கிளட்ச் மூலம் பின்புற வீலுக்கு வழங்கப்படும். GT மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.0 வினாடிகளிலும்  மற்றும் GT-C மாடல் 3.6 வினாடிகளிலும்  கடக்கும் வல்லமை கொண்டது.

இந்த மாடல்கள் சிறந்த செயல்திறன், ஏரோ டைனமிக் மற்றும் சிறந்த சஸ்பென்ஷன் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் மேற்கூரையை மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் போதும் வெறும் 11 வினாடிகளுக்குள் திறந்து மூடிக்கொள்ளலாம்.  இந்த வருட இறுதியில் ஐரோப்பாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் எப்போது வெளியிடப்படும் என்பது பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.