ரூ. 77.5 லட்சம் விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது மெர்சிடிஸ் பென்ஸ் AMG SLC43

மெர்சிடிஸ் பென்ஸ்  நிறுவனம் AMG SLC43 மாடலை ரூ. 77.5 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில்  இந்தியாவில் வெளியிட்டுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த வருட இறுதிக்குள் 12 மாடல்களை வெளியிய திட்டமிட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே ஐந்து மாடல்களை வெளியிட்டுவிட்டது இது ஆறாவது மாடல் ஆகும். இந்த மாடல் SLK55 மாடலுக்கு மாற்றாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் தான் 43  வரிசையில் இந்தியாவில் வெளியிடப்படும் முதல் மாடல் ஆகும். 

SLK55 மாடலில் 5.5 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. ஆனால் இந்த  மாடலில் 3.0 லிட்டர் டர்போ சார்ஜ் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 361 Bhp  திறனையும் 500 Nm  இழுவைதிறனையும் வழங்கும். இதன் திறன் 9 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மூலம் வீலுக்கு கடத்தப்படுகிறது. இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.7 வினாடிகளிலும்  அதிகபடச்சமாக  மணிக்கு 250 கிலோமீட்டர் வேகம் வரையும் செல்லும் வல்லமை கொண்டது.

இந்த மாடல் இருவர் மட்டும் அமர்ந்து செல்லக்கூடிய கன்வெர்ட்டிபிள் மாடல் ஆகும். COMAND இன்போடைன்மெண்ட் சிஸ்டம், தோல் இருக்கை கவர் என  மற்ற AMG  மாடல்களில் உள்ள அனைத்து அம்சங்களும் இதிலும் இருக்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.