ஜூலை 26 ஆம் தேதி வெளியிடப்படும் மெர்சிடிஸ் பென்ஸ் AMG SLC43

மெர்சிடிஸ் பென்ஸ்  நிறுவனம் AMG SLC43 மாடலை ஜூலை 26 ஆம் தேதி இந்தியாவில் வெளியிட உள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த வருட இறுதிக்குள் 12 மாடல்களை வெளியிய திட்டமிட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே ஐந்து மாடல்களை வெளியிட்டுவிட்டது இது ஆறாவது மாடல் ஆகும். இந்த மாடல் SLK55 மாடலுக்கு மாற்றாக இருக்கும். மேலும் இந்த மாடல் தான் AMG  வரிசையில் விலை குறைந்த அதாவது ஒரு கோடி விலை கொண்ட மாடலாக இருக்கும்.

SLK55 மாடலில் 5.5 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. ஆனால் இந்த  மாடலில் 3.0 லிட்டர் டர்போ சார்ஜ் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 361 Bhp  திறனையும் 500 Nm  இழுவைதிறனையும் வழங்கும். இதன் திறன் 9 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மூலம் வீலுக்கு கடத்தப்படுகிறது. இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.7 வினாடிகளிலும்  அதிகபடச்சமாக  மணிக்கு 250 கிலோமீட்டர் வேகம் வரையும் செல்லும் வல்லமை கொண்டது.

இந்த மாடல் இருவர் மட்டும் அமர்ந்து செல்லக்கூடிய கூப் மாடல் ஆகும். மற்ற AMG  மாடல்களில் உள்ள அனைத்து அம்சங்களும் இதிலும் இருக்கும். இந்த மாடலின் கூடுதல்  விவரங்கள் வெளியீட்டிற்கு பிறகு தெரிய வரும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.