ரூ 75 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது மெர்சிடிஸ் பென்ஸ் E-கிளாஸ் ஆல் டெர்ரைன்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதிய E-கிளாஸ் ஆல் டெர்ரைன் ஸ்டேஷன் வேகன் மாடலை ரூ 75 லட்சம் ஷோரூம் விலையில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தான் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய 2018 C-கிளாஸ் மாடலை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.  மெர்சிடிஸ் பென்ஸ் E-கிளாஸ் ஆல் டெர்ரைன் மாடல் E-கிளாஸ் செடான் மாடலின் அடிப்படையிலான ஸ்டேஷன் வேகன் மாடல் ஆகும். 

இந்த மாடலில் E-கிளாஸ் செடான் மாடலை விட கூடுதலாக டைனமிக் டிரைவ் மோடு, பெரிய 19-இன்ச் அலாய் வீல், சுவ போன்ற முன்புற கிரில், ஸ்கிட் பிளேட் மற்றும் சைடு மௌல்டிங் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை, அதே வடிவமைப்பு தான் கொடுக்கப்பட்டுள்ளது. 12.3-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், ABS மற்றும் EBD என மெர்சிடிஸ் பென்ஸ் E-கிளாஸ் செடான் மாடலில் கொடுக்கப்பட்டுள்ள அணைத்து வசதிகளும் இந்த மாடலிலும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடல் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர், BSVI மாசுக்கட்டுப்பாடு கொண்ட டீசல் எஞ்சினில் மட்டுமே கிடைக்கும். இந்த எஞ்சின் 194PS @3800rpm திறனையும் 500Nm @1600-2800rpm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் 9G-Tronic ட்ரான்ஸ் மிஷன்சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 8.0 வினாடிகளிலும் அதிகபடச்சமாக மணிக்கு 231 கிலோமீட்டர் வேகம் வரையும் செல்லும் வல்லமை கொண்டது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.