ரூ. 50.7 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது மெர்சிடிஸ் பென்ஸ் GLC SUV

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் GLC  SUV மாடலை இந்தியாவில் ரூ. 50.7 லட்சம் புனே ஷோ ரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. GLC220 டீசல் மாடல் ரூ. 50.7 லட்சம் விலையிலும் GLC300 பெட்ரோல் மாடல் ரூ. 50.9 லட்சம் விலையிலும் வெளியிடப்பட்டுள்ளது.  இது C-கிளாஸ் செடான் மாடலின் SUV  வெர்சன் ஆகும். மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த வருட இறுதிக்குள் 12 மாடல்களை வெளியிய திட்டமிட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே நான்கு மாடல்களை வெளியிட்டுவிட்டது இது ஐந்தாவது மாடல் ஆகும். 

இந்த மாடல் பெரிய கிரில், பம்பர், வீல் ஆர்சுகள், பிளாஸ்டிக் கிலாடிங்குல், இரட்டை புகை போக்கி என முழுமையான SUV தோற்றத்தை தருகிறது. C-கிளாஸ் செடான் மாடலின் உட்புறம் அப்படியே இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

GLC220 மாடலில் 2.1 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 168 Bhp  திறனையும் 400 Nm  இழுவைதிறனையும் வழங்கும். GLC300 மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல்  என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 245 Bhp  திறனையும் 370 Nm  இழுவைதிறனையும் வழங்கும். இந்த இரண்டு மாடலிலுமே  9 ஸ்பீட் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ் மிசனும் 4MATIC எனும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் COMMAND மியூசிக் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, ஆட்டோமேடிக் குளிரூட்டி என ஏராளமான  வசதிகள் கிடைக்கும். இந்த மாடல் ஆடி Q5 மற்றும் BMW X3 மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.