மெர்சிடிஸ் பென்ஸ் - AMG C43 கேப்ரியோலேட் அறிமுகப்படுத்தப்பட்டது

2016 ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் மெர்சிடிஸ் பென்ஸ்  AMG C43 கேப்ரியோலேட் அறிமுகப்படுத்தப்பட்டது. இது C கிளாஸ் மாடலின் திறந்த மேற்கூரை கொண்ட மாடல் ஆகும். 

இந்த மாடலில் C43  கூப் மாடலில் உள்ள அதே 3.0 லிட்டர் ட்வின் டர்போ V 6  என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 362 Bhp திறனையும் 520 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.8 வினாடிகலில் கடக்கும் வல்லமை கொண்டது. இந்த மாடலில் 9 ஸ்பீட் கொண்ட ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் அதிக பட்சமாக மணிக்கு 250 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.

மற்ற மெர்சிடிஸ் பென்ஸ்  மாடல்களில் உள்ள அணைத்து சிறப்பம்சங்களும் இதில் உள்ளது. இந்த மாடலின் மேற்கூரை 20 வினாடிகளில் திறந்து மூடும் தன்மை கொண்டது. மேலும் இந்த மேற்கூரை 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் போதும் 20 வினாடிகளில் திறந்து மூடும் வல்லமை கொண்டது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.