ரூ. 1.28 கோடி விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது மெர்சிடிஸ் பென்ஸ் S400

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் S400 மாடலை  ரூ.1.28 கோடி டெல்லி ஷோரூம் விலையில் இந்தியாவில் வெளியிட்டது. இந்த S400 மாடல் பதிய பெட்ரோல் எஞ்சின் கொண்ட S - கிளாஸ் வெர்சன் ஆகும். ஏற்கனவே S - கிளாஸ் ரேஞ்சில்  350D மற்றும் S500 மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

மற்ற S - கிளாஸ் மாடல்களுக்கும் இதற்கும் தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. புதிய 3.0 லிட்டர் V6 டர்போ என்ஜின் மட்டும் பொருத்தப்பட்டுள்ளது. இது 330 bhp திறனும் 480 Nm இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடலில் 9 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இது பின்புற வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது.  

இந்த புதிய S400 மாடல் 350D மற்றும் S500 மாடல்களுக்கு இடையில் நிலைநிருதப்பட்டுள்ளது. மற்ற S - கிளாஸ் மாடலில் கிடைக்கும் அணைத்து வசதிகளும் இந்த மாடலிலும் கிடைக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.