2018 ஆம் ஆண்டு எலெக்ட்ரிக் கார்களை வெளியிடும் மெர்சிடிஸ் பென்ஸ்

தற்போது எலெக்ட்ரிக் கார்களை தயாரிப்பதில் அணைத்து கார் நிறுவனங்களும் ஆர்வம் காட்டுகிறது. அந்த வகையில் மெர்சிடிஸ் பென்ஸ் தற்போது  எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் இறங்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டு தனது முதல்  எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த மாடல் EVA  எனும் புதிய பிளாட்பார்மில் தயாரிக்கப்படவுள்ளது.  

மெர்சிடிஸ் பென்ஸ் ஒரு கிராஸ் ஓவர் மற்றும் 2 சலூன் என மூன்று எலெக்ட்ரிக் கார்களை சோதனை செய்து வருகிறது. இவற்றில் முதலில் ஒரு சலூன் மாடல் 2018 ஆம் ஆண்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து இன்னொரு சலூன் மாடலும் கிராஸ் ஓவர் மாடலும் வெளியிடப்படும்.  பெரும்பாலும் இந்த மாடல்கள் பின்புற டிரைவ் சிஸ்டம் கொண்டதாக இருக்கும். மேலும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலும் கிடைக்கும்.

விலை மற்றும் எஞ்சின் தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். அவற்றை தெரிந்து கொள்ள மௌவளுடன் தொடர்பில் இருங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.