மே 18 இந்தியாவில் வெளியிடப்படும் மெர்சிடிஸ் பென்ஸ் GLS SUV

ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவில் மே 18 ஆம் தேதி GLS  மாடலை வெளியிட இருக்கிறது. முன்பு GL-கிளாஸ் என்று அழைக்கப்பட்ட மாடல் தான் தற்போது GLS  என அழைக்கப்படுகிறது. மேலும் இது S-கிளாஸ் செடான் மாடலுக்கு நிகரான SUV  மாடல் ஆகும். மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த வருட இறுதிக்குள் 12 மாடல்களை வெளியிய திட்டமிட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே மூன்று மாடல்களை வெளியிட்டுவிட்டது இது நான்காவது மாடல் ஆகும்.

இந்த புதிய மாடலில் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் சில ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் புதியLED முகப்பு மற்றும் பின்புற விளக்குகள், புதிய அலாய் வீல், புதிய கிரில் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறம் புதிய ஸ்டீரிங் வீல், புதிய இருக்கை தோல் கவர் மற்றும் பென்ஸ் நிறுவனத்தின் புதிய கமேன்ட் இன்போடைன்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த  இன்போடைன்மென்ட் சிஸ்டம் மூலம் மியூசிக், பின்புற கேமரா மற்றும் குளிரூட்டி என அனைத்தயும் கட்டுப்படுத்தலாம்.

இந்த மாடல் 3.0 லிட்டர் V6 டர்போ டீஸல் என்ஜினில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடலில் 9 ஸ்பீட் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ் மிசனும் 4MATIC எனும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மும் கிடைக்கும். எஞ்சின் தொடர்பான முழுமையான விவரங்கள் வெளியிட்ட பிறகே தெரியும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.