புதிய ஃபோர்டு ஃபிரீஸ்டைல் கிராஸ் மாடலின் அறிமுக தேதி அறிவிப்பு

ஃபோர்டு இந்தியா நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு ஃபிகோ மாடலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட புத்தம் புதிய ஃபிரீஸ்டைல் கிராஸ் மாடலை அறிமுகப்படுத்தியது. அதைத்தொடர்ந்து ஃபிரீஸ்டைல் மாடலின் ப்ரவுச்சர், வேரியன்ட், மைலேஜ் விவரங்களை ஃபோர்டு தனது இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. தற்போது இந்த மாடல் ஏப்ரல் 26 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்படும் என ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மாடல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும், மேலும் முன்புறத்தில் இரண்டு காற்றுப்பை மற்றும் ABS சிஸ்டம் ஆகியவை அணைத்து வேரியன்ட்டிலும் நிரந்தர அம்சமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாடலின் முன்பதிவு ஏற்கனவே நடைபெற்று வருகிறது. 

இந்த மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் தலா நான்கு வேரியன்ட்டுகளில் கிடக்கும். இந்த புதிய ஃபோர்டு ஃபிரீஸ்டைல் கிராஸ் மாடலின் வெளிப்புறத்தில் பிளாஸ்டிக் கிளாடிங்குகள், புதிய கருப்பு நிற கிரில், புதிய 15 இன்ச் அலாய் வீல், புதிய ரூப் ரயில் புதிய முன்புற மற்றும் பின்புற பம்பர் அமைப்புகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறம் ஃபிகோ மாடல் போல அல்லாமல் புதிய வடிவமைப்பு கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் ஃபோர்டு நிறுவனத்தின் புதிய முகப்பு கிரில் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலிலும் ஆறு காற்றுப்பை, EBD உடன் கூடிய ABS, ESC, டிராக்சன் கன்ட்ரோல் சிஸ்டம் மற்றும் புதிய ஆக்டிவ் ரோல் ஓவர் ப்ரிவென்ஷன் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் புதிய 3 சிலிண்டர் கொண்ட1.2 லிட்டர் டிராகன் பெட்ரோல் என்ஜின் மற்றும் அதே 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கும். இதன் 1.2 லிட்டர் டிராகன் பெட்ரோல் என்ஜின் 96Bhp திறனையும் 120Nm இழுவைத்திறனையும் வழங்கும். இது தான் இந்தியாவில் தற்போது இருக்கும் 1.2 லிட்டர் எஞ்சின்களில் டர்போ சார்ஜர் இல்லாமல் அதிக திறனை தரும் எஞ்சின் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் இதன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 100Bhp திறனையும் 215Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் ஐந்து ஸ்பீட் கொண்ட மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் மட்டுமே கிடைக்கும். மேலும் இதன் பெட்ரோல் எஞ்சின் மாடல் 19Kmpl மைலேஜும், டீசல் எஞ்சின் மாடல் 24.4Kmpl மைலேஜும் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இந்த மாடல் ஹூண்டாய் i20 ஆக்டிவ், பியட் அவென்ச்சுரா மற்றும் வோல்க்ஸ் வேகன் போலோ கிராஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக நிலைநிறுத்தப்படும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.