நாளை வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் எக்ஸென்ட்

ஹூண்டாய் நிறுவனம்  மேம்படுத்தப்பட்ட  எக்ஸென்ட் காம்பேக்ட் செடான் மாடலைநாளை வெளியிடவுள்ளது. இந்த மாடலில் சில ஒப்பனை மாற்றங்களும், டீசல் எஞ்சினில் சில மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. மேலும் சில புதிய வேரியண்டிலும் வெளியிடப்படவுள்ளது. 

இந்த புதிய எக்ஸென்ட் மாடலில் மற்ற இடங்களை விட முன்புறத்தில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. புதிய அறுங்கோண க்ரில் அமைப்பு இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த க்ரில் அமைப்பு தான் இனி வரும் அனைத்து ஹூண்டாய் கார்களிலும்  இருக்கும். மேலும் முன்புறத்தில் புதிய  பனி விளக்குகள், முகப்பு விளக்குகள் மற்றும் பகல் நேரத்தில் ஒளிரும் LED  விளக்குகள்  கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் உட்புறத்தில் டாப் வேரியண்டில் புதிய 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலின் பெட்ரோல் என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. அதே 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் தான் கிடைக்கிறது. இது 83 BHP திறனையும் 114 NM இழுவைத்திறனையும் வழங்கும். ஆனால் இந்த மாடலின் டீசல் என்ஜினில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட மாடல் புதிய 1.2 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கும். இது 75 BHP திறனையும் 190 NM இழுவைத்திறனையும் வழங்கும்.  இதன்  பெட்ரோல் மாடல் 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் 4 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்சிலும் டீசல் மாடல் 5 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்சிலும் கிடைக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.