புதிய தலைமுறை மாருதி சுசூகி வேகன் R மாடலின் படங்கள் கசிந்தது

புதிய தலைமுறை மாருதி சுசூகி வேகன் R மாடலின் படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. இந்த மாடல் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடலின் சில தொழில்நுட்ப விவரங்களும் இணையத்தில் கசிந்துள்ளது. இந்த புதிய தலைமுறை மாடல் முந்தய மாடலை விட பெரியதாகவும், அதிக இட வசதி கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலில் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், மல்டி பங்க்சன் ஸ்டேரிங் வீல், ABS மற்றும் EBD என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் என ஏராளமான மாற்றங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் முந்தய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு எஞ்சினும் ஐந்து ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் கிடைக்கும். மேலும் இந்த மாடல் வெள்ளை, பீஜ், பிரவுன், ஆரஞ்சு, கருப்பு மற்றும் ப்ளூ என ஆறு வண்ணங்களில் கிடைக்கும்.

இந்த மாடல் 3655 மில்லி மீட்டர்  நீளமும், 1620 மில்லி மீட்டர் அகலமும், 1675 மில்லி மீட்டர் உயரமும் மற்றும் 2435 மில்லி மீட்டர் வீல் பேசும்  கொண்டது. மேலும் இந்த மாடல் மொத்தம் 10 வேரியன்ட்டுகளில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் வரும் ஜனவரி 23 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்படும். இந்த புதிய தலைமுறை மாடல் டாடா டியாகோ, ஹூண்டாய் சேண்ட்ரோ மற்றும் டட்சன் கோ போன்ற மாடல்களும் கடும் போட்டியாக இருக்கும்.

Image Source: Autocarindia.com

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.