ரூ 7.99 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது அடுத்த தலைமுறை ஹூண்டாய் வெர்னா

ஹூண்டாய் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2017 ஆம் ஆண்டு வெர்னா மாடலை ரூ 7.99 லட்சம் டெல்லி ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் மொத்தம் 12 வேரியண்ட்டுகளில் கிடைக்கும். மேலும் இது ஐந்தாம் தலைமுறை மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல்:
Verna E (Manual): ரூ 7.99 லட்சம்
Verna EX (Manual): ரூ 9.06 லட்சம்
Verna EX (Automatic): ரூ 10.22 லட்சம்
Verna SX (Manual): ரூ 9.49 லட்சம்
Verna SX (O) (Manual): ரூ 11.08 லட்சம்
Verna SX(O) (Automatic):ரூ 12.23 லட்சம்

டீசல்:
Verna E (Manual): ரூ 9.19 லட்சம்
Verna EX (Manual): ரூ 9.99 லட்சம்
Verna EX (Automatic): ரூ 11.39 லட்சம்
Verna SX (Manual): ரூ 11.11 லட்சம்
Verna SX+ (Automatic): ரூ 12.61 லட்சம்
Verna SX(O) (Manual): ரூ 12.39 லட்சம்

இந்த மாடல் ஒரு சிறிய எலன்ட்ரா மாடல் போல் தோற்றமளிக்கிறது. எலன்ட்ரா மாடலின் வடிவங்கள் இதில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்புறத்தில் ஹூண்டாய் நிறுவனத்தில் புதிய தனித்துவமான க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், சன் ரூப் மற்றும் பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் மாடலை விட 29 மில்ல்லி மீட்டர் அதிக நீளமும் 15 மில்லி மீட்டர் அதிக அகலமும் கொண்டது. மேலும் வீல் பேஷும் 10 மில்லி மீட்டர் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் தற்போது 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில் மாட்டு தான் தான் கிடைக்கும். இதன் பெட்ரோல் எஞ்சின் 123 Bhp திறனையும் 155 Nm இழுவைத்திறனையும் மற்றும் டீசல் எஞ்சின் 128 Bhp திறனையும் 260 Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இரண்டு மாடலும் ஆறு ஸ்பீட் கொண்ட மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ் மிஷனில் கிடைக்கும். இந்த மாடல் வெள்ளை, சிவப்பு, கருப்பு, பிரவுன், ஆரஞ்சு, ஸ்டார் டஸ்ட் மற்றும் சில்வர் என ஏழு வண்ணங்களில் கிடைக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.