ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் அடுத்த தலைமுறை ஹுண்டாய் எலன்ட்ரா

சமீபத்தில் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் பேசிய ஹுண்டாய் இந்தியா நிறுவனத்தில் நிர்வாக இயக்குனர்   அடுத்த தலைமுறை ஹுண்டாய் எலன்ட்ரா மாடல் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் எனவும் மேலும் மூன்று அல்லது நான்கு புதிய மாடல்களை இந்த வருட இறுதிக்குள்  வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த ஆறாம் தலைமுறை ஹுண்டாய் எலன்ட்ரா மாடல் கடந்த வருடம் வெளிப்படுத்தப்பட்டது. இந்த மாடல் தற்போது இருக்கும் மாடலை விட அதிக நீள அகலங்களை கொண்டது. ஆனால் வீல் பேஸ் மாற்றப்படவில்லை. உட்புற மற்றும் வெளிப்புற தோற்றத்தில் நிறைய மாறுதல்கள் இந்த மாடலில் செய்யப்பட்டுள்ளது.

என்ஜினில் மாற்றம் இருக்காது அதே 1.8 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் டீசல் என்ஜினில் தான் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த  பெட்ரோல் என்ஜின் 149.5 bhp (6500 rpm) திறனும் 181Nm (4700rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. மற்றும் இதன் டீசல் என்ஜின்  மாடல் 128 bhp (4000 rpm) திறனும் 265Nm (1900-2750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. 

இந்த மாடல் டொயோடா கரோலா ஆல்டிஸ், ஸ்கோடா சூப்பர்ப்  மற்றும் செவ்ரோலேட் குரூஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.