கிக்ஸ் கிராஸ் ஓவர் மாடலின் டீசர் படங்களை வெளியிட்டது நிசான்

நிசான் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு கிக்ஸ் கிராஸ் ஓவர் எனும் கான்செப்ட் மாடலின் படத்தை வெளியிட்டது. தற்போது கிக்ஸ் மாடலின் சில டீசர் படங்களை வெளியிட்டுள்ளது. இந்த மாடல் ரியோ ஒலிம்பிக் போட்டியின் தொடக்க  விழாவில் அறிமுகப்படுத்தப்படும். அதை தொடர்ந்து இந்த மாடல் 2017 ஆம் ஆண்டு இந்தியாவில் வெளியிடப்படும் என தெரிகிறது. முதலில் இந்த மாடல் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படும் பிறகு மற்ற நாடுகளில் வெளியிடப்படும்.

இந்த மாடலின் படங்கள் மட்டுமே இதுவரை  வெளியிடப்பட்டுள்ளது. மற்ற எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. எனினும் இந்த மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு எஞ்சின்களிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இந்த மாடல் தொடர்பான விவரங்கள் ஏதும் அதிகம் வெளியிடப்படவில்லை. தொடர்ந்து விவரங்களை தெறித்து கொள்ள மௌவளுடன் தொடர்பில் இருங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.