அம்பாஸடர் கார் பிரண்டை விலைக்கு வாங்கியது பீஜோ

பீஜோ நிறுவனம் ஹிந்துஸ்தான் நிறுவனத்துடன் இணைந்து மீண்டும் இந்தியாவில் கால் பாதிக்க ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில் அம்பாஸடர் கார் பிரண்டை ரூ.80 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளது. இதன் மூலம்  அம்பாஸடர் பிராண்டில் மீண்டும் கார்கள் வெளியிடப்படும் என்ற ஆவல் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. 

அம்பாஸடர் கார் மிக நீண்ட காலமாக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்த மாடல். மேலும் மாருதி நிறுவனத்திற்கு முன்பாகவே இந்தியாவில் மிக சிறந்து விளங்கிய மாடல் ஆகும்.  இந்த மாடல் 1956 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் சீரீஸ் III மாடலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட மாடல் ஆகும். இந்த மாடல் 1957 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன் பிறகு மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப எஞ்சினை மேம்படுத்துவதற்கான நிதி ஆதாரம் இல்லாததால் இதன் விற்பனை நிறுத்தப்பட்டது.

பீஜோ நிறுவனம் சென்னையில் உள்ள ஹிந்துஸ்தான் கார் ஆலையில் தனது கார்களை உற்பத்தி செய்யவும் ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது ஆலையில் மிட்சுபிஷி எஸ்யூவி உற்பத்தி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் அம்பாஸடர் பிராண்டில் மீண்டும் கார்கள் வெளியிடப்படுமா என்று எந்த ஒரு தகவலையும் பீஜோ நிறுவனம் வெளியிடவில்லை.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.