ரூ.47.1லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட ரேஞ் ரோவர் எவோக்

மேம்படுத்தப்பட்ட ரேஞ் ரோவர் எவோக் மாடல் இந்தியாவில் ரூபாய் 47.1லட்சம் மும்பை ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது. இந்த மாடல் PURE, HS, HSE மற்றும் HSE DYNAMIC என மொத்தம் நான்கு வேரியண்டுகளில் கிடைக்கும். உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் மட்டும் சில ஒப்பனை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட மாடல் இந்த ஆண்டு ஆரம்பத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

முன்புறம் பின்புறத்தில் பம்பர்கள் மாற்றப்பட்டுள்ளது. புதிய அலாய் வீல் மற்றும் புதிய பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. உட்புறத்தில் புதிய இருக்கைகள், 8 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 187 bhp திறனையும் 420 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் 9 வேக ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் அதிகபட்சமாக  மணிக்கு 195 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் மற்றும் 100 கிலோமீட்டர் வேகத்தை 8.5 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.