ரூ 9.99 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய ரெனோ கேப்டர்

ரெனோ நிறுவனம் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட கேப்டர் கிராஸ் ஓவர் மாடலை ரூ 9.99 லட்சம் ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. ரெனோ நிறுவனத்தின் டஸ்டர் மாடலின் பிளாட்பார்மில் தான் இந்த மாடலும் தயாரிக்கப்பட்டுள்ளது. 

வேரியன்ட் வாரியாக இதன் சென்னை ஷோரூம் விலை விவரம்:

பெட்ரோல்

RXE -  ரூ 9.99 லட்சம் 

RXL – ரூ 11.12 லட்சம் 

RXT – ரூ 11.74 லட்சம் 

டீசல்

RXE - ரூ 11.39 லட்சம் 

RXL – ரூ 12.52 லட்சம் 

RXT – ரூ 13.14 லட்சம் 

Platine – ரூ 13.93 லட்சம் 

RXT மற்றும் Platine வேரியன்ட் டுகளில் மட்டும் இரட்டை வண்ணம் கிடைக்கும். அதற்கு ரூ 17,000 அதிகமாக செலுத்த வேண்டும்.

இந்த மாடலில் 17 இன்ச் அலாய் வீல், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், 7 இன்ச் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், LED முகப்பு மற்றும் பின்புற விளக்குகள் என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலுக்கு பல கஸ்டமைசேஷன் வசதிகளையும் ரெனோ நிறுவனம் வழங்குகிறது. இந்த மாடல் 4333 மிமீ நீளமும், 1813 மிமீ அகலமும், 1613 மிமீ உயரமும் மற்றும் 204 மிமீ தரை இடைவெளியும் கொண்டது. 387 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot Space) இட வசதி கொண்டது.

இந்த மாடலில் டஸ்டர் மாடலில் உள்ள அதே 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் எஞ்சின் 106Bhp திறனையும் மற்றும் 142Nm இழுவைத்திறனையும் வழங்கும். இதன் டீசல்  எஞ்சின் 110Bhp திறனையும் மற்றும் 240Nm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த இரண்டு எஞ்சினும் முறையே ஐந்து மற்றும் ஆறு ஸ்பீட் கொண்ட மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் மட்டுமே கிடைக்கும்.  இந்த மாடலில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் ஆகியவை கொடுக்கப்படவில்லை. ஆன்னால் கூடிய விரைவில் இந்த வசதிகள் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் பெட்ரோல் மாடல் 13.87kmpl  மைலேஜும் டீசல் மாடல் 20.37kmpl மைலேஜும் தரும் என அரை சான்றளித்துள்ளது. 

இந்த மாடல் டஸ்டர் மாடலுக்கு மேலாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் ஹூண்டாய் க்ரெட்டா, மருதி S-கிராஸ்  போன்ற மாடல்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.