2016 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்படும் 1.0 லிட்டர் என்ஜின் மற்றும் AMT கியர் பாக்ஸ் கொண்ட ரெனால்ட் க்விட்

ரெனால்ட் க்விட் மாடல் யாரும் எதிர்பார்க்காத ஏன் ரெனால்ட் நிறுவனமே எதிர்பார்க்காத அளவு இமாலய வெற்றியை பெற்றுள்ளது. எனவே அந்த வெற்றியை தக்க வைத்து கொள்ள   ரெனால்ட் நிறுவனம் 1.0 லிட்டர் என்ஜின் மற்றும் AMT கியர் பாக்ஸ் கொண்ட க்விட் மாடலை 2016 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

க்விட் மாடலின் வெற்றியை தக்க வைத்து கொள்ள மட்டுமில்லாமல் மாருதி சுசுகி ஆல்டோ K10 மற்றும் ஹுண்டாய் இயான் மாடல்களின் போட்டியை சமாளிக்கவும் 1.0 லிட்டர் என்ஜின் மற்றும் AMT கியர் பாக்ஸ் கொண்ட மாடலை வெளியிடுவதில் மும்மரமாக உள்ளது ரெனால்ட் நிறுவனம்.

க்விட் மாடல் இதுவரை 60,000 முன்பதிவுகளுக்கு மேல் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாடலின் காத்திருப்பு காலம் அதிகபட்சம் 9 மாதங்கள் வரை இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1.0 லிட்டர் என்ஜின் மற்றும் AMT கியர் பாக்ஸ் கொண்ட ரெனால்ட் க்விட் மாடல் ரூ.3.5 முதல் 4.5 லட்சம் விலை கொண்டதாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.