ரூ.4.25 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது ரெனோ க்விட் AMT

ரெனோ நிறுவனம் AMT  ட்ரான்ஸ்மிஷன் கொண்ட க்விட் மாடலை ரூ.4.25 லட்சம் டெல்லி ஷோ ரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல்  RXT(O) வேரியண்டில் மட்டுமே கிடைக்கும். இது மேனுவல்  ட்ரான்ஸ்மிஷன் கொண்ட  க்விட் மாடலை விட ரூ.30,000 அதிகம் விலை கொண்டது.

இந்த மாடலில் 999cc கொள்ளளவு கொண்ட 3 சிலிண்டர் 1.0 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 67 Bhp  திறனையும் 91 Nm  இழுவைத்திறனையும் வழங்கும். இந்த மாடல் லிட்டருக்கு 24.04 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் என ARAI  சான்றளித்துள்ளது.

இந்த AMT கியர்  பாக்ஸ் கொண்ட மாடலில் எல்லா மாடலிலும் இருப்பது போன்று கியர் லிவர் கொடுக்கப்படாமல் டேஸ் போர்டில் டிரைவ் , நியுட்ரல் மற்றும் ரிவேர்ஸ் எனும் மூன்று ஆப்சன்கள் கொண்ட ரோட்டரி கியர் நாப்  மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இமாலய விற்பனையை பதிவு செய்து வரும் க்விட் மாடலுக்கு இந்த AMT மாடல் கூடுதல் பலமாக அமையும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.