2.56 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது ரெனால்ட் - க்விட்

மாருதி சுசுகி - ஆல்டோ மற்றும் ஹுண்டாய் - இயான் மாடலுக்கு போட்டியாக ரெனால்ட் நிறுவனம் க்விட் மாடலை 2.56 லட்சம் ஆரம்ப விலையில் இன்று வெளியிட்டுள்ளது. என்ட்ரி லெவல் மாடல் என்று சொல்லப்பட்டாலும் இது ஒரு சிறிய SUV  மாடல் போல் தோற்றமளிக்கிறது. முன்புற கிரில், பனி விளக்குகள், பின்புற விளக்குகள் என அனைத்துமே சிறப்பான தோற்றத்தை தருகிறது. மேலும் இது ஒரு சிறிய டஸ்டர் போல தோற்றத்தை தருகிறது. இந்த மாடல் பெரிய வெற்றியை பெரும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. 

மேலும் இந்த மாடலில் டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இது போட்டியாளர்களான ஆல்டோ மற்றும்  இயான் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. உட்புறத்திலும் விலை உயர்ந்த கார்களில் உள்ளது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலில் 0.8 லிட்டர் 799cc கொள்ளளவு  கொண்ட பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 54 bhp திறனையும் மேலும் 25.17 Kmpl மைலேஜும் தரும். இந்த மாடல் தான் இந்தியாவிலேயே அதிக மைலேஜ் தரும் பெட்ரோல் கார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாடல் Standard , RXE , RXL மற்றும் RXT என நான்கு வேரியண்டுகளில் கிடைக்கும். மேலும் இந்த மாடல் 180 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.