க்விட் மாடலுக்கான பிரத்தியேக உபகரணங்களை வெளியிட்டது ரெனால்ட்

ரெனால்ட் - க்விட் மாடலின் முன்பதிவை சில நாட்களுக்கு முன்பு  தொடங்கிய ரெனால்ட் நிறுவனம் இந்த மாடலை வெளியிடுவதற்கு முன்பே க்விட் மாடலுக்கான பிரத்தியேக உபகரணங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. சிறப்பான தோற்றத்தையும் சொகுசு அனுபவத்தையும் இந்த உபகரணங்கள் தரும் மேலும் மற்ற க்விட் கார்களில் இருந்து உங்கள் காரை தனித்துவமாக காட்ட இந்த உபகரணங்கள் உதவும்.

இந்த மாடலில் 0.8 லிட்டர் 799cc கொள்ளளவு  கொண்ட பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இது 54 bhp திறனையும் மேலும் 25.17 Kmpl மைலேஜும் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் Standard , RXE , RXL மற்றும் RXT என நான்கு வேரியண்டுகளில் கிடைக்கும் எனவும்  எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் தான் இந்தியாவிலேயே அதிக மைலேஜ் தரும் பெட்ரோல் கார் ஆகும்.

2014 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த ஆட்டோ கண்காட்சியில் ரெனால்ட்  நிறுவனத்தால் க்விட் கான்செப்ட் மாடல் கட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது அதன் பிறகு சில நாட்களுக்கு முன்பு இதன் தயாரிப்பு நிலை மாடலையும் வெளியிட்டது.

என்ட்ரி லெவல் மாடல் என்று சொல்லப்பட்டாலும் இது ஒரு சிறிய SUV  மாடல் போல் தோற்றமளிக்கிறது. முன்புற கிரில், பனி விளக்குகள், பின்புற விளக்குகள் என அனைத்துமே சிறப்பான தோற்றத்தை தருகிறது. மேலும் இது ஒரு சிறிய டஸ்டர் போல தோற்றத்தை தருகிறது.   

உட்புறத்திலும் விலை உயர்ந்த கார்களில் உள்ளது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த மாடல் 3 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.